Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

ட்ரிகர் திரை விமர்சனம்

trigger movie review

ஒரு ரகசிய போலீஸ் படை, அழகம் பெருமாள் தலைமையில் இயங்குகிறது. நேர்மையும், துணிச்சலும் கொண்ட இளம் அதிகாரி அதர்வாவுக்கு ரகசிய போலீஸ் படையில் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அவரிடம், நீ யார் என்பது யாருக்கும் தெரியக்கூடாது. அதனால் வெளியில் தலை காட்டாதே என்று எச்சரிக்கிறார், அழகம் பெருமாள்.

குழந்தை கடத்தல் பற்றி தகவல் கிடைப்பதால், அழகம்பெருமாளின் எச்சரிக்கையை மீறுகிறார் அதர்வா. கடத்தல்காரர்களை அடித்து உதைத்து துவம்சம் செய்கிறார், அதர்வா. அதன் விளைவுகள் என்ன? என்பது மீதிக்கதை.

அதர்வா உடல், பொருள், ஆவி என அனைத்தையும் டைரக்டரிடம் ஒப்படைத்து இருக்கிறார். படம் முழுக்க டுமீல் டுமீல் என்று துப்பாக்கி சண்டை போடுகிறார். கடத்தப்பட்ட குழந்தைகளை பார்த்து கண்கலங்குகிறார். காதலையும், காதலியுடன் டூயட் பாடுவதையும் தவிர்த்து இருக்கிறார். பாவம், தான்யா. அவருக்கு அதிக வேலை இல்லை.

அருண் பாண்டியனுக்கு போலீஸ்கார அப்பா வேடம் ரொம்ப பிடித்து இருக்கிறது போல. ஆதார், படத்திலும் போலீஸ்காரர், இந்த படத்திலும் போலீஸ் அப்பா.

சந்தோஷ் நாராயணன் இசையில், பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம். டைரக்டர் சாம் ஆன்டன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். ஆனால், லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். தெளிவான திரைக்கதை இல்லாத்தது வருத்தம்.

மொத்தத்தில் ட்ரிகர் ஜொலிக்க வில்லை.

trigger movie review
trigger movie review