சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் திரிஷா.
தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
தற்போதும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹீரோவுடன் டூயட் பாடுவது மட்டுமல்லாமல் சொலோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திரிஷாவா இது என வியந்து வருகின்றனர்.