நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர், இந்த லாக்டவுன் நேரத்தில் தனது டிக்டாக் பக்கத்தில் பல்வேறு விதமான விடியோக்களை பதிவிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கேள்விக்கு பதிலளித்து வந்தார். மேலும் இந்தியா சினிமாவின் மூன்று சிறந்த நடிகர்கள் யாரென்றும் கூறியுள்ளார்.
1. கமல், 2. மோகன்லால், 3. அமீர் கான் என தனக்கு பிடித்த மூன்று சிறந்த நடிகர்கள் என கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூறும் படமான கார்த்திக் டயல் செய்த எண் எப்போது வெளியாகும் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த திரிஷா அந்த கூறும் படத்திற்கு இசையமைக்கும் வேலை நடந்து வருவதாகவும், விரைவில் கூறும் படம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
அதோடு தன் வாழ்வில் இதுவரை உண்மையான காதலையே சந்தித்தது இல்லை என்று கூறியுள்ளார்.