தமிழ், தெலுங்கும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெறும் வெற்றி பெற்ற படம் 96 திரைப்படம்,
இப்படத்தின் மூலம் நடிகை த்ரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் தற்போது கர்ஜனை, ராங்கி, ராம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.
இந்நிலையில் இவர் முதன் முதலாக தமிழ் திரை உலகிற்கு ஒரு துணை நடிகையாக தான் திரைப்பயணத்தை துவங்கி உள்ளார் .
தமிழில் ‘ஜோடி’ என்கிற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்த த்ரிஷா, அப்படத்திற்காக அப்போது வெறும் ரூபாய் 500 தான் த்ரிஷா சம்பளமாக வாங்கினாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது .
தற்போது த்ரிஷா ஒரு படத்திற்கு நடிக்க வாங்கும் சம்பளம் மட்டும் ரூபாய் 1.5 கோடி என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது .