Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நான் மன்னிப்பு கேட்கும் ஜாதி கிடையாது”:மன்சூர் அலிகான் ஓபன் டாக்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மன்சூர் அலிகான் இந்த படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் திரிஷாவை கட்டிலில் தூக்கிப்போட்டு ரேப் பண்ணுவது போல காட்சிகள் இருக்கும் என நினைத்தேன் என்று பேசிய விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகான் பேச்சுக்கு திரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில் தொடர்ந்து பலரும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றின் நான் மன்னிப்பு கேட்கும் ஜாதி கிடையாது என கூறியுள்ளார்.மேலும் லியோ படத்தில் நடித்தது தப்பு எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அது எடிட் செய்யப்பட்ட வீடியோ நான் தப்பு செய்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Trisha issue Latest update
Trisha issue Latest update