நடிகை திரிஷாவை கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அவரின் வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது.
கொரோனா ஊரடங்கால் சினிமா முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. சினிமாவை சேர்ந்தவர்கள் பலரும் நஷ்டமடைந்துள்ளனர்.
இந்நிலையில் திரிஷா டிக்டாக்கிலும் கலக்கலான வீடியோ வெளியிட்டிருந்தார். அண்மையில் நாடு டிக்டாக்கும் தடை செய்யப்பட்டுவிட்டது. தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்படத்தை 2.68 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். திரிஷா அடுத்ததாக நடிகை சிம்ரன் உடன் இணைந்து நடிக்கவுள்ளார்.