Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திரிஷா நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.வீடியோ இதோ

trisha-movie release date update

தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் ‘தி ரோட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தி ரோட்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.