Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் திரிஷா படம்

Trisha movie to be released live on OTT

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், மலையாளத்தில் அறிமுகமான படம் தான் ‘ஹே ஜூட்’.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் திரிஷா, நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஷ்யாம் பிரசாத் இயக்கியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை தற்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். அதுவும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

நடிகை திரிஷா நடித்துள்ள படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.