Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குந்தவை வெளியிட்ட வீடியோ.குவியும் லைக்.

trisha-post-ponniyin-selvan-bts-video

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியானது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் 200 கோடியை வசூலித்துள்ளதாக அந்நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பிடிஎஸ் வீடியோவை குந்தவையாக நடித்து அசத்தி வரும் நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.