தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்து பிரபலமாவதெல்லாம் தாண்டி தற்போது instagram, youtube tiktok போன்ற செயலிகள் மூலம் பலர் பல்வேறு விதங்களில் பாப்புலர் ஆகி வருகின்றனர்.
அப்படி youtube வீடியோக்களில் பைக்குகளை விதவிதமாக வேக வேகமாக ஓட்டி சாகசங்களை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிடிஎப் வாசன். வித விதமாக பைக் வாங்கி எல்லையில்லா வேகத்தில் வாகனத்தை ஓட்டி கெத்து காட்ட வேண்டும் என 2k கிட்ஸ்களில் மனதில் ஆசை விதையை விதைத்து வருகிறார்.
ஏற்கனவே இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் தற்போதைய தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இவரது பிறந்த நாளில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் சாகசம் என்ற பெயரில் பைக்கை கண்ட மணிக்கு ஓட்டினால் ஹீரோவாகலாம் என்பதற்கு தவறான முன்மாதிரியாக டிடிஎஃப் வாசன் இருந்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ இவரை வைத்து இன்னும் எத்தனை பேர் முளைக்க போகிறார்களோ என ஆதங்கத்துடன் பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
