Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறை தண்டனையை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன். முழு விவரம் இதோ

பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது.

பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டு ஹெல்மெட்டை அனுமதியின்றி பயன்படுத்தியதாக டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டிடிஎஃப் வாசனின் நண்பர் அஜீஸ் இந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அஜீஸ் வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை உரிய அனுமதி பெறாமல் எவ்வாறு கொண்டு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத, அனுமதிக்கப்படாத ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஹெல்மெட்டை பயன்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிரத்யேகமான வெளிநாட்டு ஹெல்மெட்டை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அனுமதி சான்று பெறாத காரணத்தினால் அந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த முடியாது.

TTFVasan controversy details
TTFVasan controversy details