நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இருமல், சளி போன்ற நேரத்தில் மஞ்சள் கலந்த பால் குடிப்பது மிகவும் நல்லது. உடல் ஏதேனும் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் மஞ்சள் பால் குடிக்கும்போது அதை எதிர்த்துப் போராடும்.
இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மஞ்சள் மிக முக்கியமான பொருள். கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும். இதயம் சீராக இயங்கி ஆரோக்கியமாக இருந்தாலே ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மஞ்சள் உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச்சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர்வாகவும் உள்ளது.
மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது.