சினிமா பிரபலங்களுக்கு இணையாக சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பும், ரசிகர்கள், ரசிகைகள் கூட்டமும் அமைந்து விடுகிறது.
அண்மைகாலமாக நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அரண்மனைக்கிளி.
இதில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் நடிகை நவ்யா சுவாமி. அண்மையில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா நோய் தொற்று பாசிட்டிவ் என தெரிந்ததும் முதலில் ஷூட்டிங் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டாராம்.
3,4 நாட்கள் தனக்கு உடல் சோர்வும், தலைவலியும் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தான் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது எனவும் கூறியுள்ளார்.
தொடக்கத்தில் இது குறித்து அறிந்ததும் வீட்டு செல்லும் போது அழுததாகாவும், தூங்க முடியாமல் அவதிப்பட்டதாகவும், அம்மா இப்போதும் அழுது கொண்டிருப்பதாகவும், நிறைய பேர் நலம் விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.