தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படம் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் தற்போது வேறு ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்காக கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பதானி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில் அஜித்துக்கு ஜோடியாகப் போவது யார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் தெரியவரும்.
