தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த படம் தற்போது வரை உலகம் முழுவதும் மொத்தமாக 152.49 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது
முதல் வாரத்தில் 146.72 கோடி
இரண்டாவது வாரத்தில்
Day 1 – ₹ 1.96 cr
Day 2 – ₹ 1.53 cr
Day 3 – ₹ 1.30 cr
Day 4 – ₹ 1.58 cr
Day 5 – ₹ 1.75 cr
Day 6 – ₹ 0.37 cr
Day 7 – ₹ 0.28 cr
என மொத்தமாக இரண்டு வார முடிவில் இப்படம் ரூபாய் 152.49 cr வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் நெல்சன் திலீப் குமார் இப்படம் ரூபாய் 230 கோடி வசூலை தாண்டியதாக வெளியான செய்திக்கு ட்விட்டரில் லைக் செய்து இருந்தார். இதனால் படத்தின் உண்மையான வசூல் எது என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
