Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மிஷன் சாப்டர் 1படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ua-certificate-for-mission-chapter-1-movie

“ஏ. எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த திரைப்படம் மிஷன் சாப்டர்-1 ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் அருண் விஜய்யை வைத்து ஆக்ஷன் படத்தில் களமிறங்கியுள்ளார். திரைப்படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே ஏ.எல். விஜய் இயக்கிய மதராசப்பட்டினம், தாண்டவம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கிறார் எமி ஜாக்சன்.படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.அண்மையில் படத்தின் டிரைலர் மற்றும் முதல் சிங்கிள்- லை படக்குழு வெளியிட்டு இருந்தது.”

ua-certificate-for-mission-chapter-1-movie
ua-certificate-for-mission-chapter-1-movie