Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமன்னன் பட க்குழு சார்பாக கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்து பதிவு போட்ட உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi-stalin-viral-tweet-about-kamal

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசனை உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு அதில், “மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.