Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

ui திரை விமர்சனம்

UI Movie Review

நாயகன் உபேந்திரா நல்லவர்களை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து வருகிறார். மற்றொருவர் செய்த தவறுக்காக, தான் ஏற்றுக் கொண்ட தண்டனை பெரும் அளவிற்கு நல்லவராக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மற்றொரு உபேந்திரா நல்லது செய்யும் உபேந்திராவை அடைத்து வைத்துவிட்டு மக்களுக்கு கெட்டது செய்கிறார்.இறுதியில் நல்ல உள்ளம் கொண்ட உபேந்திரா தப்பித்தாரா? கெட்டது செய்யும் உபேந்திரா யார்? எதற்காக மக்களுக்கு கெட்டது செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உபேந்திரா, நல்லவன், கெட்டவன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். நல்லவன் சாந்தமாகவும், கெட்டவன் அடிதடி, சண்டை, வசனம் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

நாயகியாக நடித்து இருக்கும் ரேஷ்மா நானையா, உபேந்திராவை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த கதாபாத்திரம் வெகுளியாகவும், கோமாளித்தனமாகவும் அமைந்துள்ளது. இவரது கதாபாத்திரம் கதைக்கு ஒட்டவே இல்லை. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.இயக்கம்நாம் கலியுலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் உபேந்திரா. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கிறார்.

நடிப்பில் கவனம் செலுத்திய உபேந்திரா, கொஞ்சம் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். கடைசி வரை என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. வித்தியாசமான முயற்சியை செய்து இருக்கிறார் உபேந்திரா. ஆனால் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. இசைஅஜனிஸ் லோக்னாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.ஒளிப்பதிவு வேணு கோபாலின் கேமரா கலர்புல், கருப்பு என்று மாறி மாறி படம் பிடித்து இருக்கிறது.தயாரிப்பு லஹரி பிலிம்ஸ் & வீனஸ் இன்டெர்ட்டைநேர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.