தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமா வரை பட்டையை கிளப்பி வருபவர் இயக்குனர் அட்லி. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ராஜா ராணி. ஜெய், நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, சந்தானம் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் பல விமர்சனங்களை பெற்று இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது. நயன்தாராவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது போல நஸ்ரியாவுக்கு சூப்பரான படமாக உள்ளது.
ஆனால் முதலில் இந்த படத்தில் நஸ்ரியாவுக்கு பதிலாக வேறொரு நடிகை தான் நடிகை நடிக்க இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆமாம் முதல் முதலாக இந்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது அவர் மற்ற படங்களிலும் நடித்து வந்ததால் டேட் பிரச்சனை உருவாகியுள்ளது. ஆகவே இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். இருப்பினும் தற்போது வரை அவர் இந்த படத்தை மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.