தல அஜித்தின் ஆசை படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஆசை.
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்தப் படத்தில் சுவலட்சுமி, வடிவேலு, மற்றும் பலர் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
தல அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்லை.
ஆம், இயக்குனர் வசந்த் இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சூர்யா அப்போது திரையுலகம் பக்கம் வரவில்லை.
ஆகையால் அவர் இந்தப் படத்தை மறுக்க இந்த வாய்ப்பு அடுத்ததாக அஜித்திற்கு சென்றுள்ளது. சூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்து இருந்தால் அவருக்கு மாஸான ஓபனிங்காக இது இருந்திருக்கும் என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.