தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய உச்சத்தை தொட்டது.
படத்தில் நடித்த பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர் சத்யராஜ் என அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகவும் எதார்த்தமான நடிப்பால் மெருகேற்றி இருந்தனர். அதிலும் குறிப்பாக ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
அவரைத் தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது என கூறி வந்தனர். இப்படியான நிலையில் இந்த படத்தில் ராஜமாதாவாக முதலில் நடிக்க இருந்தது ரம்யா கிருஷ்ணன் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் எஸ்.எஸ் ராஜமவுலி இந்த படத்தில் முதலில் ராஜமாதாவாக நடிக்க வைக்க நடிகை ஸ்ரீதேவியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அவர் அதிக கண்டிஷன் போட்டவுடன் அதிக சம்பளம் கேட்டதால் அந்த முடிவை கைவிட்டு விட்டதாக ராஜமவுலி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியும் சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பாங்க அதில் சந்தேகம் இல்லை ஆனாலும் ரம்யா கிருஷ்ணன் தான் சரியான சாய்ஸ். எனவே ஸ்ரீதேவி இந்த வாய்ப்பை மிஸ் பண்ணது நல்லது தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
