தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மித்ரன் ஜவகர் இயக்கியிருந்த இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று நடிகைகள் நடித்திருந்தனர்.
ஆனால் முதலில் இந்த நடிகைகள் மூன்று பேருக்கு பதிலாக வேறு நடிகைகள் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதலில் இந்த படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்துள்ளது. இதனால் தனுஷ் நித்யா மேனன் நடித்த ஷோபனா கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் ராசி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகா மற்றும் பிரியா பவானி சங்கர் கதாபாத்திரத்தில் சமந்தா உள்ளிட்டரையும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் இந்த படத்தின் தயாரிப்பு பணி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கைக்கு சென்றதால் இறுதி நேரத்தில் நடிகைகளின் தேர்வு மாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒருவேளை தனுஷின் கணக்குப்படி நயன்தாரா சமந்தா மற்றும் ஹன்சிகா இந்த படத்தில் நடித்திருந்தால் படம் எப்படி இருக்கும் என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.