தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தில் நடிக்க மறுத்த கதை தெரிய வந்துள்ளது.
அஜித்தும் ஷங்கரும் ஜீன்ஸ் படத்திலிருந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசை பட்டுள்ளனர். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே வந்துள்ளது. இந்த சமயத்தில்தான் இயக்குனர் சங்கர் அஜித்தை மனதில் வைத்து எழுதிய எந்திரன் படத்தின் கதையை அவரிடம் கூறியுள்ளார்.
அவர் எனக்கு இந்த பிரம்மாண்டம் உயர்நிலைத் தொழில்நுட்பம் இதெல்லாம் வேண்டாம் ஒரு சாமானியனாக படத்தில் நடித்து விட்டுப் போனால் அதுவே போதும் அப்படித்தான் இதுவரை நடித்து வருகிறேன் என கூறியுள்ளார்.
இதனால் இந்த கதை எனக்கு செட்டாகாது என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தான் ஷங்கர் இந்த படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சொல்லி இயக்கியதாக தெரிய வந்துள்ளது.

unknown-secrets-of-enthiran-movie update