தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் காதல் கோட்டை திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தேவயானி நடித்திருப்பார்.
ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அஞ்சு அரவிந்த் தான். இந்த படத்தில் நடிக்குமாறு படக்குழு அவரை அணுகியபோது அவருக்கு அண்ணாமலை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் அஜித் படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார். அண்ணாமலை திரைப்படம் மட்டுமல்லாமல் விஜய்யுடன் இணைந்து பூவே உனக்காக படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.