தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்துடன் தமிழில் அஜித்தின் துணிவு திரைப்படம் போட்டி போட உள்ளது. தெலுங்குவில் பிரபாஸின் ஆதிபுருஷ் உட்பட 3 திரைப்படங்கள் மோத உள்ளது. இப்படியான நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் முதலில் நித்யா மேனன் என்ற ரோலில் நடிக்க இருந்தவர் யார் என தெரியவந்துள்ளது.
இயக்குனர் அட்லி இந்த கதாபாத்திரத்திற்காக நடிகை ஜோதிகாவை தான் அணுகி உள்ளார். ஆனால் கதையில் சில முரண்பாடுகள் இருந்த காரணத்தினால் அவர் இந்த கதையை நிராகரிக்க அந்த வாய்ப்பு நித்யா மேனனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது என்பதை குறிப்பிடத்தக்கது.
