இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தற்போது இரட்டை குழந்தைக்கு அப்பா அம்மாவாகி உள்ளனர்.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதமான நிலையில் அதற்குள் குழந்தை பிறந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்துள்ளது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
