தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று படையப்பா. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடிக்க வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து மிரட்டி இருப்பார்.
இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத படமாக படையப்பா இருந்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த படத்தில் சௌந்தர்யாவுக்கு பதில் முதன்முதலாக வேறொரு நடிகை இருந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
ஆமாம் அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை மீனா தான். முதலில் நடிகை மீனா இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்துள்ளார். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ள அதன் பின்னர் தான் இந்த வாய்ப்பு சௌந்தர்யாவுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.
ரஜினியின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா ரஜினிக்கு ஜோடியாகவே சில படங்களில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
