தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். இந்த படத்தை இயக்குனர் ராம் குமார் என்பவர் இயக்கியிருந்தார்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம் விஷ்ணு விஷால் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது நடிகர் ஜெய் தான்.
தற்போது பட்டாம்பூச்சி என்ற படத்தில் சைக்கோ கொலைக்காரன் ஆக நடித்து வரும் ஜெய் அளித்த பேட்டி ஒன்றில் தான் ராட்சசன் படத்தை தவற விட்டதாக கூறியுள்ளார்.
அதேபோல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க இருந்தது நான்தான் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
இரண்டு படமுமே செம வாய்ப்பாக இருந்திருக்கும், ஆனால் இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே என அவரது ரசிகர்கள் வருத்தத்தோடு கூறி வருகின்றனர்.
