Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் பேட்டி அளிக்காததற்கு இந்த இரண்டு விஷயம் தான் காரணமா? வைரலாகும் தகவல்

Unknown Secrets of Thalapathy Vijay Interview

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அபர்ணா தாஸ் செல்வராகவன் கிங்ஸ்லி யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது. அதற்கு பதிலாக தளபதி விஜய் சன் டிவியில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு விஜய் பேட்டி அளித்துள்ளார்.

இந்தப் பேட்டி இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள நிலையில் பத்து வருடங்களாக விஜய் பேட்டி அளிக்காதது ஏன் என தெரியவந்துள்ளது. வில்லு படத்தின் பிரஸ்மீட்டில் விஜய் கோபமாக கத்தியது மற்றும் தலைவா படத்தின் கசப்பான அனுபவங்கள் ஆகியவை தான் பத்து வருடமாக பேட்டி தராமல் இருந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Thalapathy Vijay Interview
Unknown Secrets of Thalapathy Vijay Interview