தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்துக்கு தள்ளிப் போய்விட்டது. இதனால் நடிகர் சூர்யா அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
வாடிவாசல் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போய் வருவது சூர்யா ரசிகர்கள் அப்செட்டாக்கி இருந்தது. தற்போது அதற்கான காரணங்கள் தெரியவந்துள்ளது.
அதாவது வாடிவாசல் படத்தில் மொத்தம் 12 காளைகள் இடம் பெற உள்ளன. இதற்கான டெஸ்ட் ஷூட்டிங் சென்னையில் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்க உள்ள நிலையில் அதிலிருந்து பன்னிரண்டு காளைகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதன் காரணமாகவே வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போய் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கிடைத்துள்ள இந்த கேப்பில் தான் நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
