தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித் வில்லத்தனம் கலந்த ஹீரோவாகவே நடித்து மிரட்டியிருப்பார். அஜித்தின் கதாபாத்திரத்தை வெங்கட்பிரபு அப்படியே செதுக்கி இருப்பார் என கூறலாம்.
ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்லை. இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தில் முதலில் விவேக் ஓபராய் மற்றும் சத்யராஜ் ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கத்தான் முயற்சி செய்துள்ளார்.
அதன் பிறகு அஜித் தான் இந்த கதையை கேட்டு நான் நடிக்கிறேன் என தானாக ஒப்புக் கொண்டு நடித்து கொடுத்துள்ளார்.
விரைவில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது என வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.