தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் நம்பர் ஒன் சீரியல் ஆக ஒளிபரப்பாகி வருகிறது கார்த்திகை தீபம். கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
தீபா பல்லவி என்ற பெயரில் முகத்தை மறைத்து கார்த்திக்காக பாடிவரும் நிலையில் சிதம்பரம் கார்த்திக்கு இன்னும் பத்து நாளில் பல்லவி யார் என்பதை கண்டுபிடிக்கிறேன் என சவால் விட்டிருந்தான்.
இந்நிலையில் தான் இந்த வாரம் கார்த்திகை தீபம் சீரியலில் பல நாள் உண்மை கூடவே இருப்பதாக தெரியவந்துள்ளது. தீபா தான் பல்லவி என்ற உண்மை மொத்தமாக உடைய கார்த்திக் எடுக்க போக முடிவு என்ன என்ற அதிரடியான உச்சகட்ட திருப்புங்களுடன் சீரியல் கதைக்களம் மாற்றத்தை சந்திக்க இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் கார்த்திகை தீபம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கார்த்திகை தீபம் சீரியல் டிஆர்பியிலும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.