Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திகில் கிளப்பும் V டிரைலர் – ஜனவரி 8 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

V Tamil Movie From Jan 08th

விறுவிறுப்பான கதைக்களத்தில் திகில் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வி.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை ( 08.01.2021) அன்று வெளியாக உள்ள திரைப்படம் வி.

ட்ரூ சோல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரூபேஷ்குமார் வழங்கும் இந்த திரைப்படத்தை டாவின்சி சரவணன் என்பவர் இயக்கியுள்ளார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியை மையமாகக்கொண்டு இந்த படத்தின் கதை அமைந்துள்ளது படத்தின் டீசர் டிரைலர் வீடியோக்கள் மூலமாக தெரிய வருகிறது.

படத்தின் 2 ட்ரைலர்களும் திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளன. V.com என்ற இணையதளத்தில் நம்மளுடைய பிறந்த தேதியை பதிவிட்டால் இறப்பு தேதி தெரிந்துவிடும் என பெண்ணொருவர் தேட அதனைத் தொடர்ந்து அவர்கள் நண்பர்களும் அதே இணையதளத்தில் அவர்களின் பிறந்த தேதி பதிவு செய்து இறந்த தேதி என்னவாக இருக்குமென தேடுகின்றனர்.

அனைவருக்கும் ஒரே தேதி தான் வருகிறது. அந்த தேதியில் இவர்கள் எப்படி இறக்கிறார்கள், ஏன் இறக்கிறார்கள்? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லர் மூலமாக தெரிகிறது.

இந்த திகில் படத்திற்கு அணில் கே சாமி ஒளிப்பதிவு செய்ய இளங்கோ கலைவாணன் என்பவர் இசையமைத்துள்ளார்.

V.T ஸ்ரீஜித் என்பவர் இப்படத்தை எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். மிரட்டல் செல்வா ஸ்டண்ட் காட்சிகளை கவனித்துள்ளார். அறிமுக நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஜனவரி 8ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.