Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காளையை அடக்கும் சூர்யா.. இணையத்தில் வெளியான வாடிவாசல் ஷூட்டிங் புகைப்படம்

Vaadivasal Shooting Spot Photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னை ஈசிஆரில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படப்பிடிப்பில் நடிகர் சூர்யா காளையை அடக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகின்றன.

இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு நடிகர் சூரியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் “வாடிவாசல்”ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் “வாடிவாசல்”ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம்.