தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த படம் உலகம் முழுவதும் வெகு விரைவில் ரிலீசாக உள்ளது. தற்போது பரவிவரும் கொரானா வைரஸ் காரணமாகவே இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு பக்கா கிராமத்து கதையை கொண்ட படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடித்து முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படத்தை அப்படியே வைத்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சமூக வலைதளப் பக்கங்கள் முழுவதும் இதைப் பற்றிய பேச்சுதான் பரவிக் கொண்டிருக்கிறது.
வெற்றிமாறன் கூட்டணியில் சூர்யா இரட்டை வேடம் என நாளுக்கு நாள் வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது. மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் சூர்யாவிற்கும் சூர்யா ரசிகர்களுக்கும் வாடிவாசல் நிச்சயம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா டபுள் ஆக்ஷனில் நடிக்கப் போவது இது ஏழாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.