தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த மாதம் 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியான திரைப்படம் வாத்தி. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாளில் 10 கோடி வரை வசூல் செய்து வரவேற்பை பெற்றிருந்த இப்படம் தொடர்ச்சியாக வசூல் வேட்டையாடி வருகிறது. அந்த வகையில் இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் படங்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் படமாக வாத்தி திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த தகவலால் மகிழ்ச்சி அடைந்த தனுஷ் ரசிகர்கள் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
Love for #Vaathi / #SIRMovie is UNSTOPPABLE ❤️
The film has crossed a massive 1️⃣0️⃣0️⃣ crores gross worldwide 🌎
Thank you all for the phenomenal support 😇@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @SitharaEnts @7screenstudio pic.twitter.com/GOKevvLQo4
— Sithara Entertainments (@SitharaEnts) March 4, 2023