Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

OTT யில் மாஸ் காட்டும் வாத்தி. படக்குழு கொடுத்த அப்டேட்

vaathi-movie-ott-release-viral update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த வாத்தி திரைப்படத்தின் ott ரிலீஸ் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது கடந்த மாதம் 17ஆம் தேதி வெங்கி ஆட்டூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வாத்தி திரைப்படம் வெளியானது. சம்யுக்தா மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இப்படம் தற்போது மார்ச் 17ஆம் தேதியான இன்று netflix தளத்திலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.