கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை தொடர்ந்து வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழில் “வாத்தி” என்ற பெயரிலும் தெலுங்கில் “சார்” என்ற பெயரிலும் உருவாகி இருக்கும் திரைப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து நேற்றைய முன்தினம் இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியானது.
தற்போது இது குறித்து படக்குழு வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதாவது, இணையதளத்தில் அதிக அளவில் பார்வையாளர்களைக் கடந்து தொடர்ந்து மாஸ் காட்டி வரும் இப்படத்தின் ட்ரெய்லர் இதுவரை 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக சிறிய வீடியோவை பகிர்ந்து படக்குழு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. அது தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
#VaathiTrailer Hits 3 MILLION+ views, continues to Trend at #1 on #YouTube 🔥
▶️ https://t.co/r3hP1jdvEC @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @adityamusic @SitharaEnts @Fortune4Cinemas @7screenstudio #Vaathi #VaathiOn17Feb 🖋️ pic.twitter.com/QMuoCaXSOs
— Seven Screen Studio (@7screenstudio) February 10, 2023