வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ், தனது விஸ்வாசத்தை காட்ட எதிர் Gang-ல் சேர்ந்து, எதிர் gang தலைவனை கொள்ள முயற்சிப்பார்.
அதன்பின் வரும் எதிர்வினைகளையும், தனது மக்களுக்காக தனுஷ் போராடுவதும் தான் படத்தின் மையக்கதை. மேலும் இப்படத்தின் திரைக்கதையும், இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம்.
இந்நிலையில் இப்படத்தின் கதை ஹாலிவுட்டில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘A Prophet’ எனும் படத்தின் கதையை போலவே இருக்கிறது.
ஆம் இப்படத்திலும் ஹீரோ ஒரு ஜெயிலுக்குள் செல்லுகிறார். அங்கிருக்கும் இரு Gang எப்போதும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றது. அதற்குள் சிக்கிய ஹீரோ அதனை எப்படி சமாளித்து வெளியேறுகிறார் என்பது மீதி கதை.
இதனை கேட்டுக்கும் பொழுது வடசென்னை கதையை கேட்டபது போலவே இருக்கிறது என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் A Prophet படம் 2009ஆம் ஆண்டு வெளியானது, வடசென்னை 2018ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.