வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வட சென்னை’. இந்த படத்தில் தனுஷ், இயக்குனர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷ் தயாரிந்திருந்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.வட சென்னை பகுதியில் உள்ள மக்களை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘வட சென்னை’ திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், சென்னை கமலா திரையரங்கில் வரும் 12-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்பட உள்ளதாகவும் இதுவரை இப்படத்திற்காக 4,150 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.”,