Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

vadivelu-naai-sekar-returns-movie-trailer

கோலிவுட் திரை உலகில் காமெடி கிங் ஆக வலம் வரும் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க சந்தோஷ நாராயணன் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் பயங்கரமாக வைரலானது.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்த்து எழுந்துள்ள நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதனைக்காண ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.