Tamilstar
News Tamil News

மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ள நடிகர் வடிவேலு, இந்த பிரபல இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா?

தமிழ் திரையுலகில் தற்போது காமெடி என்றாலே நடிகர் வடிவேலு தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

அந்த வகையில் இவரின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளன.

இவர் கடைசியாக தளபதி விஜய்யின் மெர்சல் மற்றும் சிவலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் தற்போது நடிகர் கமலின் தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு ஹீரோவாக 23ஆம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்களில் கலக்கியது போல், மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இயக்குனர் சுராஜ் தான் அந்த திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் அவர் இயக்கத்தில் தலைநகரம், மருதமலை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.