தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய நிகழ்ச்சி டாப் குக்கு டூப் குக்கு.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகள் நடுவரான வெங்கடேஷ் பட் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மேசன் மீடியா நிறுவனமும் சன் டிவிக்கு மாறி உள்ளது.
நேற்று முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வடிவேலு பங்கேற்றார். இந்த நிலையில் இவர் ஒரே ஒரு நாள் எபிசோடில் பங்கேற்க 40 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வைரலாக இதைக் கேட்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
