Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ஆட்டோ ஓட்டுனர் கூட்டத்தில் ஒரு அதிசயம்”. ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய வைரமுத்து

திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது இவர் பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.

இந்நிலையில், ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’என்ற தலைப்பில் ஆய்வுசெய்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதை அறிந்த வைரமுத்து அவரை வீட்டுக்கழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், தனது சமூக வலைதளத்தில், “லூர்துராஜ்

ஓர் ஆட்டோ ஓட்டுநர்

‘கவிப்பேரரசு வைரமுத்து

திரைப்பாடல்களில்

புதுக்கவிதைக் கூறுகள்’

என்ற தலைப்பில் ஆய்வுசெய்து

சென்னைப் பல்கலைக்கழகத்தில்

டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்

வியந்து போனேன்;

வீட்டுக்கழைத்துப்

பாராட்டினேன்

ஆட்டோ ஓட்டுநர்

கூட்டத்தில் ஓர் அதிசயம்

வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Vairamuthu about auto driver
Vairamuthu about auto driver