கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சகிப்புத்தன்மைசகமனிதனை மதித்தல்தன்னுயிர் போலவேமண்ணுயிர் பேணுதல்என்பனவெல்லாம்நீதி மொழிகள் அல்ல;ஏசு பெருமான்வாழ்ந்து காட்டியவாழ்வியல் நெறிகள்இந்த நெறிகளைமதம் சார்ந்தும் வாழலாம்;மதம் கடந்துமனம் சார்ந்தும் வாழலாம்தத்துவம் தந்தஉத்தமர் பிறந்தநாள்வாழ்த்திக்கொள்ள மட்டுமல்லவாழ்வதற்கும்இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.
சகிப்புத்தன்மை
சகமனிதனை மதித்தல்
தன்னுயிர் போலவே
மண்ணுயிர் பேணுதல்
என்பனவெல்லாம்
நீதி மொழிகள் அல்ல;
ஏசு பெருமான்
வாழ்ந்து காட்டிய
வாழ்வியல் நெறிகள்இந்த நெறிகளை
மதம் சார்ந்தும் வாழலாம்;
மதம் கடந்து
மனம் சார்ந்தும் வாழலாம்தத்துவம் தந்த
உத்தமர் பிறந்தநாள்
வாழ்த்திக்கொள்ள…— வைரமுத்து (@Vairamuthu) December 25, 2023