தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியை புதிதாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் வைதேகி காத்திருந்தாள். பிரஜன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சரண்யா நடிக்க ஒப்பந்தமானார்.
பழம்பெரும் நடிகை லதா உட்பட பலர் இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் வெள்ளித்திரை வாய்ப்புகளால் டேட் ஒதுக்க முடியவில்லை என இந்த சீரியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் பிரஜன். இதனையடுத்து அவருக்கு பதிலாக ராஜபார்வை சீரியலில் நடித்த முன்னா நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால் தற்போது சில காரணங்களால் இந்த சீரியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது சீரியல் குழு. இதுகுறித்து சீரியலின் இயக்குனர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் வாழ்க்கைப் பயணத்தில் சுவாரஸ்யமான விஷயமே பல திருப்பங்கள் தான். இன்னும் கூடுதலான பாஸிட்டிவ் எனர்ஜியோட அடுத்த எதிர்பாராத சுவாரஸ்யத்தை தேடி பயணிக்கிறேன். எனது பயணத்தில் எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் தங்களுக்கும், என்னுடன் பயணித்த,… பயணிக்கும் அனைவருக்கும் என்றென்றும் நன்றிகள் பல’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சீரியல் நன்றாக தானே போச்சு அப்புறம் ஏன் முடிவுக்கு கொண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.