தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் மற்றும் தல அஜித்.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி அந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அஜித் மற்றும் விஜய் ரசிகர்களும் எப்போது மாஸ்டர் மற்றும் வலிமை திரைப்படம் வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இப்படங்களின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது மாஸ்டர் படத்தை அடுத்து வரும் தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதேபோல் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு வெளியிட வலிமை படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.