தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை ஆடி வருகிறது.
ஓவர்சிஸ் நாடுகளிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் படம் வெளியானதை தொடர்ந்து இந்தப் படம் விரைவில் OTT-ல் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அதுகுறித்த கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
அனைத்து மொழி உரிமைகளையும் சேர்த்து ஜீ நிறுவனம் ரூபாய் 65 கோடிக்குமேல் கொடுத்து வலிமையை கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படம் 4 வாரங்கள் கழித்து ஜீ5 தளத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
அதாவது மார்ச் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
