தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. முதலில் திரையரங்குகளில் வெளியாகி 300 கோடி வசூலை பெற்ற இந்தத் திரைப்படம் அடுத்ததாக ஜூ 5 இணையதளத்தில் வெளியானது.
வெளியான முதல் நாளில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த படம் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். அதன் பின்னர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
