வலிமை தமிழ் சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் இம்மாதம் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை பார்க்க உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் புக்கிங் மலேசியாவில் தற்போதே தொடங்கிவிட்டதாம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஷோ தொடங்க தொடங்க ஹவுஸ்புல் போர்ட் தான் மாட்டி வருகிறார்களாம். அந்த அளவிற்கு வலிமை படத்திற்கு எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறதாம்.
